பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி மரணம்

பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி. இவர் குடும்பத்துடன் குரோம்பேட்டையில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக ஜெமினி ராஜேஸ்வரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94. ஜெமினி ராஜேஸ்வரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்து இருக்கிறார். சந்திரலேகா படம் மூலம் சினிமாவில் நடன
நடிகையாக அறிமுகமானார். 400 படங்களுக்கு மேல் நடனம் ஆடி உள்ளார். காதல் படுத்தும் பாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். கமல்ஹாசனின் 16 வயதினிலே, பாக்யராஜின் சின்ன வீடு மற்றும் மண் வாசனை, நிறம் மாறாத பூக்கள், நீறு பூத்த நெருப்பு, இது எங்க நாடு, விளையாட்டு கல்யாணம், பத்தாம் பசலி, உனக்காக நான், திருடன், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன். எதிர்நீச்சல் மற்றும் கயல் உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். மரணம் அடைந்த ஜெமினி ராஜேஸ்வரிக்கு தட்சிணாமூர்த்தி, செல்வராஜ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ஜெமினி ராஜேஸ்வரி மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story