மாணவனுக்கு மிரட்டல் சர்ச்சையில் நடிகர் முகேஷ்


மாணவனுக்கு மிரட்டல் சர்ச்சையில் நடிகர் முகேஷ்
x
தினத்தந்தி 7 July 2021 1:11 AM GMT (Updated: 7 July 2021 1:11 AM GMT)

மாணவனுக்கு மிரட்டல் சர்ச்சையில் நடிகர் முகேஷ்.

பிரபல மலையாள நடிகரான முகேஷ் தமிழில் சுந்தர்.சி.யின் ஐந்தாம் படை மற்றும் மனைவி ஒரு மாணிக்கம், ஜாதிமல்லி உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது கொல்லம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.வாகவும் இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு ஒரு மாணவன் முகேசுக்கு போன் செய்தபோது அந்த மாணவனுக்கு தனது போன் நம்பரை கொடுத்தவரை அறைவேன் என்றும், நீ என் முன் நின்றால் கம்பால் அடிப்பேன் என்றும் கோபமாக பேசிய பேச்சுக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

முகேசுக்கு கண்டனங்கள் எழுந்தன. இதற்கு பதில் அளித்து முகேஷ் கூறும்போது, “தேர்தல் முடிந்ததில் இருந்து அதிகமான போன் அழைப்புகள் வந்தன. மின்சாரம் இல்லை. ரெயில் வரவில்லை என்றெல்லாம் பேசுகிறார்கள். எனக்கு தொல்லை கொடுப்பதற்காக திட்டமிட்டு சிலர் இதுபோல் பேசுகின்றனர். இதன்மூலம் எனது கோபத்தை தூண்ட முயற்சிக்கின்றனர். இதுவரை அது நடக்கவில்லை. அந்த மாணவனும் அப்படித்தான். அதனால் கோபத்தில் அப்படி பேசினேன். அதற்காக மாணவனை அடிக்கும் எண்ணம் இல்லை. இதற்கு பின்னால் அரசியல் சதி உள்ளது’’ என்று கூறினார்.

Next Story