சினிமா துளிகள்

மியா ஜார்ஜுக்கு ஆண் குழந்தை + "||" + Baby boy to Mia George

மியா ஜார்ஜுக்கு ஆண் குழந்தை

மியா ஜார்ஜுக்கு ஆண் குழந்தை
தமிழில் அமரகாவியம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். விஷ்ணு விஷாலுடன் இன்று நேற்று நாளை, சசிகுமாருடன் வெற்றிவேல் மற்றும் எமன், ரம் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.
தற்போது விக்ரமுடன் கோப்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார். கேரளாவை சேர்ந்தவரான மியா ஜார்ஜ் 25-க்கும் மேற்பட்ட மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மியா ஜார்ஜுக்கும், கேரள தொழில் அதிபர் அஸ்வின் பிலிப் என்பவருக்கும் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. மியா ஜார்ஜ் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் மியா ஜார்ஜுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.


குழந்தைக்கு லூகா ஜோசப் பிலிப் என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை மியாஜார்ஜ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி மியா ஜார்ஜுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.