திருமணம் செய்ய விரும்புவதாக கூறிய ரசிகருக்கு மீனா பதில்


திருமணம் செய்ய விரும்புவதாக கூறிய ரசிகருக்கு மீனா பதில்
x
தினத்தந்தி 9 July 2021 5:46 AM GMT (Updated: 9 July 2021 5:46 AM GMT)

நடிகை மீனா ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஒரு ரசிகர், ‘‘நான் 20 வருடங்களுக்கு முன் சென்று புதிதாக பிறந்து உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்’’ என்று கேட்டார்.

அதற்கு மீனா தனது திருமண ஆல்பத்தை காட்டி, ‘‘நீங்க கொஞ்சம் லேட்’’ என்று சிரித்தார்.

‘‘தனுஷ், சிம்பு இருவரில் யார் சிறந்த நடிகர்?’’ என்ற கேள்விக்கு, ‘‘இருவரும்’’ என்று கூறி தப்பித்தார்.

‘‘உங்கள் வயது என்ன?’’ என்று கேட்ட ரசிகருக்கு, ‘‘பெண்களிடம் வயதை கேட்பது நாகரிகம் அல்ல’’ என்றார்.

Next Story