குடும்பத்தினர் நிர்ப்பந்தம்; திருமணத்துக்கு நயன்தாரா சம்மதம்


குடும்பத்தினர் நிர்ப்பந்தம்; திருமணத்துக்கு நயன்தாரா சம்மதம்
x
தினத்தந்தி 9 July 2021 6:17 AM GMT (Updated: 9 July 2021 6:17 AM GMT)

நயன்தாராவும் டைரக்டர் விக்னேஷ் சிவனும் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இருந்து 6 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்கின்றனர். ஜோடியாகவும் சுற்றி வருகிறார்கள்.

இருவரையும் விரைவில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி ரசிகர்களும் வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவுகள் வெளியிடுகின்றனர். சமீபத்தில் ரசிகர் ஒருவர் நயன்தாராவை எப்போது திருமணம் செய்வீர்கள் என்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன் திருமணத்துக்கு பணம் சேமித்துக்கொண்டு இருக்கிறேன். கொரோனா தொற்று எப்போது போகும் என்று காத்துக்கொண்டு இருக்கிறேன் என்றார்.

இதன் மூலம் கொரோனா ஓய்ந்ததும் அவர்கள் திருமணம் நடக்கும் என்று பேசப்பட்டது. இந்த நிலையில் நயன்தாரா குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி நயன்தாராவை வற்புறுத்துவதாகவும் குடும்பத்தினர் நிர்ப்பந்தம் காரணமாக நயன்தாராவும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டதாகவும் மலையாள ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த சில மாதங்களில் நயன்தாரா திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாரா தற்போது அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு
காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Next Story