சந்தானத்தை கண்கலங்க வைத்த நாயகன்!


சந்தானத்தை கண்கலங்க வைத்த நாயகன்!
x
தினத்தந்தி 10 July 2021 11:38 PM GMT (Updated: 10 July 2021 11:38 PM GMT)

ஆர்யாவும், சந்தானமும் நெருங்கிய நண்பர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல்.

பல வருடங்களாக நண்பர்களாக இருந்த இவர்கள் இடையே நெருக்கமான நட்பை ஏற்படுத்தியது, ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படம். இந்த படத்தின் படப்பிடிப்பின்போதுதான் இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

சந்தானம் இப்போது, ‘சபாபதி’ என்ற புதிய படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதில் அவருக்கு அப்பாவாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளார். படம் திரைக்கு வர தயாரானபோது, படத்தின் வியாபாரத்துக்கு ஆர்யா உதவி இருக்கிறார்.

நட்புக்கு உதாரணமாக நடந்து கொண்ட ஆர்யாவை சந்தானம் கட்டிப்பிடித்து, ‘‘நண்பேன்டா’’ என்று நெகிழ்ந்து போய் கண்கலங்கினாராம்.


Next Story