‘‘சேரன் சிபாரிசில் கதாநாயகன் ஆனேன்’’ - நடிகர் ஆரி


‘‘சேரன் சிபாரிசில் கதாநாயகன் ஆனேன்’’ - நடிகர் ஆரி
x
தினத்தந்தி 18 July 2021 1:22 AM GMT (Updated: 18 July 2021 1:22 AM GMT)

‘‘டைரக்டர் சேரன் சிபாரிசில் கதாநாயகன் ஆனேன்’’ என்று நடிகர் ஆரி கூறினார். ‘ஆடும் கூத்து’ படத்தின் மூலம் என் திரையுலக வாழ்க்கைக்கு வித்திட்டவரும் அவர்தான்.

நான், நடிகர்களுக்கு உடல் கட்டுக்கோப்பு பயிற்சியாளராக இருந்தபோது, என் சொந்த ஊரில் சித்தப்பா போஸ்ட் மாஸ்டராக இருந்தார். சித்தப்பாவின் சிபாரிசு கடிதத்தின் மூலம் டைரக்டர் சேரனை சந்தித்தேன்.அப்போதிருந்தே அவருடன் நல்ல தொடர்பு ஏற்பட்டது. அவரிடம் என் நடிப்பு ஆர்வத்தை சொன்னேன். புகைப்படத்தையும் காட்டினேன். அதைப்பார்த்தவர், ‘ஆட்டோகிராப்’ படத்தில், அவரது உடல் அமைப்பை மாற்றும் பணியை கொடுத்தார். அதைத்தொடர்ந்து, ‘தவமாய் தவமிருந்து’ படத்தில் பணியாற்றினேன்.பிறகு, ‘ஆடும் கூத்து’ என்ற படத்தில், நான் கதாநாயகனாக நடிக்க சேரன் காரணமாக இருந்தார். அவருடைய சிபாரிசினால்தான் அந்த பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது’’ என்றார், ஆரி.

Next Story