ஆபாசபட செயலிக்கும், தனக்கும் எந்த தொடர்பும் கிடையாது; போலீசாரிடம் ஷில்பா ஷெட்டி விளக்கம்


ஆபாசபட செயலிக்கும், தனக்கும் எந்த தொடர்பும் கிடையாது; போலீசாரிடம் ஷில்பா ஷெட்டி விளக்கம்
x
தினத்தந்தி 26 July 2021 1:34 AM GMT (Updated: 26 July 2021 1:34 AM GMT)

ஆபாசபட செயலிக்கும், தனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என போலீசாரிடம் நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம் அளித்து உள்ளார்.

வீட்டில் சோதனை
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கடந்த சில நாட்களுக்கு முன் ஆபாச படம் எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். தொழில் அதிபரான ராஜ்குந்த்ரா ஆபாச படம் எடுத்து, அதை ‘ஹாட் சாட்ஸ்’ என்ற செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு இருக்கலாம் என தகவல்கள் வெளியானது. இதுதொடர்பாக போலீசார் மும்பையில் உள்ள நடிகையின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த லேப்-டாப் மற்றும் வங்கி ஆவணங்கள் 
சிலவற்றையும் பறிமுதல் செய்தனர்.

எந்த தொடர்பும் கிடையாது
மேலும் நடிகை ஷில்பா ஷெட்டியிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர், கணவர் ராஜ்குந்த்ராவின் செல்போன் செயலி தொழிலுக்கும், தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என விளக்கம் அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல ‘ஹாட் சாட்ஸ்’ செயலியில் என்ன வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் ராஜ்குந்த்ராவின் விகான் நிறுவனத்தில் இருந்து இயக்குனர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் ஷில்பா ஷெட்டி போலீசாரிடம் கூறியுள்ளார்.

Next Story