8 வருடமாக முடங்கிய கவுதம் கார்த்திக் பட சிக்கல் தீர்ந்தது


8 வருடமாக முடங்கிய கவுதம் கார்த்திக் பட சிக்கல் தீர்ந்தது
x
தினத்தந்தி 28 July 2021 9:01 PM GMT (Updated: 28 July 2021 9:01 PM GMT)

சிலம்பாட்டம் படத்தை இயக்கி பிரபலமான சரவணன் இயக்கினார். கவுதம் கார்த்திக் ஜோடியாக லட்சுமி மேனன் நடித்தார்.

தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வரும் கவுதம் கார்த்திக் 2013-ல் சிப்பாய் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை சிலம்பாட்டம் படத்தை இயக்கி பிரபலமான சரவணன் இயக்கினார். கவுதம் கார்த்திக் ஜோடியாக லட்சுமி மேனன் நடித்தார்.

இதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்த நிலையில் திடீரென்று முடங்கியது. பண பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. அதன்பிறகு படப்பிடிப்பை தொடங்க பல முயற்சிகள் எடுத்தும் பலன் இல்லை. எனவே சிப்பாய் படத்தை அப்படியே கிடப்பில் போட்டனர். தற்போது தயாரிப்பாளர் தணிகைவேல் கைக்கு சிப்பாய் படம் மாறி உள்ளது. இதையடுத்து படப்பிடிப்பை 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கி உள்ளனர். பாக்கி உள்ள இரண்டு பாடல் காட்சிகளை படமாக்கி விட்டு விரைவில் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.

கவுதம் கார்த்திக் ஆனந்தம் விளையாடும் வீடு, செல்லப்பிள்ளை உள்ளிட்ட மேலும் சில படங்களிலும் நடிக்கிறார்.


Next Story