இளையராஜா இசையில் ‘உலகம்மை’


இளையராஜா இசையில் ‘உலகம்மை’
x
தினத்தந்தி 13 Aug 2021 12:29 PM GMT (Updated: 13 Aug 2021 12:29 PM GMT)

விஜய் பிரகாஷ், ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு, ‘உலகம்மை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

காதல் எப்.எம்., குச்சி ஐஸ் ஆகிய படங்களை டைரக்டு செய்த விஜய் பிரகாஷ், ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு, ‘உலகம்மை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். வெற்றி மித்ரன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகி கவுரி.

இளையராஜா இசையமைக்கிறார் என்று படக் குழுவினர் கூறுகிறார்கள். சு.சமுத்திரம் எழுதிய நாவலை தழுவிய கதை இது.

Next Story