போதை பொருளுடன் பிரபல நடிகர் கைது


போதை பொருளுடன் பிரபல நடிகர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2021 11:03 PM GMT (Updated: 29 Aug 2021 11:03 PM GMT)

பிரபல இந்தி நடிகர் அர்மான் கோஹ்லி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் பெற்றார். அர்மான் கோஹ்லி போதை பொருள் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

பிரபல இந்தி நடிகர் அர்மான் கோஹ்லி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் பெற்றார். அர்மான் கோஹ்லி போதை பொருள் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து தேசிய போதை பொருள் தடுப்பு போலீசார் மும்பை ஜுஹு பகுதியில் உள்ள அவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பதுக்கி வைத்து இருந்த போதை பொருளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

பின்னர் அர்மான் கோஹ்லியை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் கைது செய்யப்பட்டார். இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் போதை பொருள் வினியோகம் செய்த ஒருவரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அர்மான் கோஹ்லி பெயரை கூறியிருக்கிறார். அதன்பிறகே அர்மான் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தி கைது செய்து உள்ளனர். போதை பொருள் வழக்கில் திரையுலகை சேர்ந்த மேலும் சிலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

Next Story