சமந்தா பட நடிகர் கைது

சமந்தா பட நடிகர் கைது
x
தினத்தந்தி 6 Sep 2021 4:51 AM GMT (Updated: 6 Sep 2021 4:51 AM GMT)

பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணுடு. இவர் நாக சைதன்யா, சமந்தா நடிப்பில் வெளியான ஏ மாய சேசாவே மற்றும் விநாயகுடு படங்களில் நடித்து பிரபலமானார்.

பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணுடு. இவர் நாக சைதன்யா, சமந்தா நடிப்பில் வெளியான ஏ மாய சேசாவே மற்றும் விநாயகுடு படங்களில் நடித்து பிரபலமானார்.

கிருஷ்ணுடு மியாபூரில் உள்ள வீட்டில் நண்பர்களுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். இது குறித்து போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. உடனடியாக போலீசார் அந்த வீட்டை முற்றுகையிட்டு சூதாட்டம் ஆடிய கிருஷ்ணுடு உள்பட 8 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறும்போது, “கிருஷ்ணுடு தனது நண்பர்களுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்ததும் அங்கு சென்று கைது செய்தோம். ரூ.2 லட்சம் மற்றும் 8 செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளோம்'' என்றார். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story