ரிலீஸ் பிளானை மாற்றிய ‘வலிமை’ படக்குழு


ரிலீஸ் பிளானை மாற்றிய ‘வலிமை’ படக்குழு
x
தினத்தந்தி 16 Sept 2021 10:19 PM IST (Updated: 16 Sept 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படமும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அப்படத்தின் ரிலீஸை தள்ளிவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்ணாத்த படமும், வலிமை படமும் ஒரே நேரத்தில் வெளியானால் வசூல் ரீதியாக பாதிப்பு வரலாம் எனக்கருதி, வலிமை படத்தின் ரிலீசை டிசம்பர் மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
1 More update

Next Story