தேசிய விருது வென்ற இயக்குனரின் பாராட்டை பெற்ற சுபிக்‌ஷா


தேசிய விருது வென்ற இயக்குனரின் பாராட்டை பெற்ற சுபிக்‌ஷா
x
தினத்தந்தி 16 Sep 2021 6:28 PM GMT (Updated: 16 Sep 2021 6:28 PM GMT)

கோலி சோடா 2, கடுகு, வேட்டை நாய் படங்களில் நடித்த சுபிக்‌ஷாவை பிரபல இயக்குனர் சமூக வலைத் தளத்தில் பாராட்டி இருக்கிறார்.

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, தற்போது ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் ‘இடிமுழக்கம்’ படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிராமப்புற பின்னணியில் திகில் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி வருகிறது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடிக்கிறார். இந்நிலையில் மேலும் ஒரு நடிகையாக கோலி சோடா 2, கடுகு, வேட்டை நாய் படங்களில் நடித்த சுபிக்‌ஷா இணைந்து நடித்து இருக்கிறார்.

சுபிக்‌ஷாவை நடிப்பு குறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைத்தள பக்கத்தில், என்னுடைய இடிமுழக்கம் படத்தில் சுபிக்‌ஷா நடித்திருக்கிறார். மிகவும் திறமையான நடிகை, வாழ்த்துகள் சுபிக்‌ஷா என்று பதிவு செய்து இருக்கிறார்.

Next Story