ஏவல், பில்லி, சூன்யம் கதையுடன் சூ மந்திரகாளி


ஏவல், பில்லி, சூன்யம் கதையுடன் சூ மந்திரகாளி
x
தினத்தந்தி 17 Sept 2021 3:24 PM IST (Updated: 17 Sept 2021 3:24 PM IST)
t-max-icont-min-icon

கடவுள் சக்தி, மாய மந்திர சக்தி என இரண்டு வகையான சக்திகள் உலகில் இருப்பதாக அனைத்து நாடுகளிலும் பேசப்படுகிறது. இதை நம்புபவர்களும் இருக்கிறார்கள். நம்பாதவர்களும் இருக்கிறார்கள். நம்புகிற ஒரு கிராமத்து கதையே, ‘சூ மந்திரகாளி’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது.

இதில் புதுமுகங்கள் கார்த்திகேயன் வேலு, சஞ்சனா புர்லி ஆகிய இருவரும் நடித்துள்ளனர். ஈஸ்வர் கொற்றவை டைரக்டு செய்திருக்கிறார். அன்னக்கிளி வேலு தயாரித்துள்ளார்.

‘சூ மந்திரகாளி’ பற்றி இவர் கூறுகிறார்:-

‘‘கொல்லிமலையில் உள்ள ஒரு கிராமத்தில், பில்லி சூன்யம் செய்பவர்களும், அதனால் பாதிக்கப்பட்டவர்களும் நிறைய பேர் உள்ளனர். இந்த விபரீதங்களில் இருந்து கிராமத்தை காப்பாற்ற ஒரு இளம்பெண் மந்திரவாதியை, கதாநாயகன் அழைத்து வருகிறார். அவருடைய முயற்சி வெற்றி பெற்றதா?, இல்லையா? என்பதே இந்தப் படத்தின் கதை. படப்பிடிப்பு தர்மபுரி அருகில் உள்ள பாப்பாரப்பட்டியில் நடைபெற்று முடிவடைந்தது.’’
1 More update

Next Story