சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு சிம்பு கொடுக்க உள்ள சர்ப்ரைஸ்


சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு சிம்பு கொடுக்க உள்ள சர்ப்ரைஸ்
x
தினத்தந்தி 17 Sep 2021 6:11 PM GMT (Updated: 17 Sep 2021 6:11 PM GMT)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸி அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் மாநாடு, பத்து தல, மஹா, கவுதம் மேனன் இயக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன. இதில் மாநாடு படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கி உள்ள இப்படம் வருகிற நம்பர் மாதம் தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிம்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸி அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, சர்ப்ரைஸுக்கு தயாராகுங்கள் என குறிப்பிட்டுள்ளார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆல்பம் பாடல் ஒன்றை பாடி உள்ளதாகவும், அப்பாடல் விரைவில் வெளியிட உள்ளதை தான் அவர் இவ்வாறு சூசகமாக குறிப்பிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Next Story