சினிமா துளிகள்

சினிமா பாடலாசிரியர் பிரான்சிஸ் கிருபா மரணம் + "||" + FAMOUS POET AND LYRICIST FRANCIS KIRUBA PASSES AWAY

சினிமா பாடலாசிரியர் பிரான்சிஸ் கிருபா மரணம்

சினிமா பாடலாசிரியர் பிரான்சிஸ் கிருபா மரணம்
சினிமா பாடலாசிரியரும், எழுத்தாளருமான பிரான்சிஸ் கிருபா உடல்நலக்குறைவால் சென்னையில் மரணம் அடைந்தார்.
காமராஜர் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்துக்கு திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களையும் எழுதி இருந்தார். அந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருந்தார். பிரான்சிஸ் கிருபா திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பத்தினிப்பாறை கிராமத்தை சேர்ந்தவர். மல்லிகை கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம், வலியோடு முறியும் மின்னல், சம்மனசுகாடு, நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள் உள்ளிட்ட கவிதை தொகுப்புகளை வெளியிட்டு உள்ளார். இவர் எழுதிய கன்னி நாவல் இலக்கியவாதிகளால் பாராட்டப்பட்டது. பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். சொந்த ஊரில் அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடக்கிறது.