டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Sep 2021 5:19 PM GMT (Updated: 19 Sep 2021 5:19 PM GMT)

நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன், யோகிபாபு, வினய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில தினங்களுக்கு முன்பு தியேட்டரில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்நிலையில், இப்படம் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.

Next Story