சினிமா துளிகள்

‘பார்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு + "||" + ‘Border’ movie release date announcement

‘பார்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘பார்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அருண் விஜய் நடித்துள்ள பார்டர் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
‘குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர் அறிவழகனும் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ள படம் ‘பார்டர்’. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள்.


விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் மேற்கொண்டுள்ளார். பார்டர் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், பார்டர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் மாதம் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.