சினிமா துளிகள்

‘பேய் மாமா’-வாக மிரட்ட வரும் யோகிபாபு.... ரிலீஸ் தேதி அறிவிப்பு + "||" + Yogibabu to threaten as 'ghost uncle' .... Release date announced

‘பேய் மாமா’-வாக மிரட்ட வரும் யோகிபாபு.... ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘பேய் மாமா’-வாக மிரட்ட வரும் யோகிபாபு.... ரிலீஸ் தேதி அறிவிப்பு
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேய் மாமா’ படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.
யோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘பேய் மாமா’. சக்தி சிதம்பரம் இயக்கி உள்ள இப்படத்தில் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி, கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விக்னேஷ் ஏலப்பன் இப்படத்தை தயாரித்துள்ளார்.


கூர்கா பட பிரபலம் ராஜ் ஆர்யன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு எம்.வி.பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரீத்தம் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த இப்படம், தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 24-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் ரியோவின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’, ராய் லட்சுமி நடித்துள்ள ‘சிண்ட்ரெல்லா’ ஆகிய படங்களும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாப்பில் மழை சேதம்; பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு அறிவிப்பு
பஞ்சாப்பில் மழையால் பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்கும் என துணை முதல்-மந்திரி தெரிவித்து உள்ளார்.
2. நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணம் இல்லை மத்திய அரசு அறிவிப்பு
நடிகர் விவேக் மரணத்துக்கு தடுப்பூசி காரணம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை
கேரளா பெருவெள்ளத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: பினராயி விஜயனிடம் ரூ.1 கோடிக்கான காசோலை தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் சென்று வழங்கினர்.
4. தீபாவளி ரேஸில் இருந்து விலகிய சிம்பு.... ‘மாநாடு’ ரிலீஸ் தேதி மாற்றம்
சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் தீபாவளி ரேஸில் இருந்து வெளியேறுவதாக, அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
5. அருண்ராஜா காமராஜ் - உதயநிதி கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு அறிவிப்பு
2019-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற ‘ஆர்ட்டிகில் 15’ படத்தின் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.