கவுதம் மேனன் படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்கும் ‘திரிஷ்யம்’ பட நடிகர்


கவுதம் மேனன் படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்கும் ‘திரிஷ்யம்’ பட நடிகர்
x
தினத்தந்தி 21 Sept 2021 5:52 PM (Updated: 21 Sept 2021 5:52 PM)
t-max-icont-min-icon

சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் ‘வெந்து தணிந்தது காடு’.  இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை கயாடு லோகர் நடிக்கிறார்.

ஐசரி கணேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக நடிகர் சிம்பு 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிப்பது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல மலையாள நடிகர் சித்திக், சிம்புவுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் திரிஷ்யம், ஹே ஜூடு, ஒடியன் போன்ற மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story