இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த பட அப்டேட்


இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த பட அப்டேட்
x
தினத்தந்தி 24 Sep 2021 6:18 PM GMT (Updated: 24 Sep 2021 6:18 PM GMT)

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அஜித்குமார் நடித்த ‘தீனா’ படத்தின் மூலம் பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர், ஏ.ஆர்.முருகதாஸ். விஜயகாந்த் நடித்த ரமணா, சூர்யா நடித்த கஜினி ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் மேலும் பிரபலமானார். விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கி ஹாட்ரிக் ஹிட் கொடுத்ததன் மூலம் நட்சத்திர இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

இவர் அடுத்ததாக விஜய்யின் 65-வது படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்டது. இதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் திடீரென அப்படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து விஜய்யின் 65-வது பட வாய்ப்பு நெல்சனுக்கு சென்றது. தற்போது அப்படம் ‘பீஸ்ட்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஜூராசிக் பார்க், தி லயன் கிங் போன்ற ஹாலிவுட் படங்களின் பாணியில் குரங்கை மையமாக வைத்து அவர் ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் அவர் அந்த படத்தை எடுக்கப்போகிறாராம். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிப்பதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story