தயாரிப்பாளர் கேயார் வீட்டில் நடந்த சோகம்... திரையுலகினர் அஞ்சலி


தயாரிப்பாளர் கேயார் வீட்டில் நடந்த சோகம்... திரையுலகினர் அஞ்சலி
x
தினத்தந்தி 26 Sept 2021 6:32 PM IST (Updated: 26 Sept 2021 6:32 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தரராக இருந்து வரும் கேயார் வீட்டில் சோகமான விஷயம் நடந்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் சவுத் இந்தியன் பிலிம் சாம்பர் ஆப் காமர்ஸ் ஆகியவற்றில் முன்னாள் தலைவராக பணி புரிந்தவர் கேயார். இவர் தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தரராகவும் இருந்து இருக்கிறார். கேயாரின் மனைவி திருமதி இந்திரா கேயார் சிறுநீரக கோளாறு காரணமாக சில தினங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று மாலை சிகிச்சை பலனளிக்காமல் இந்திரா காலமானார். அவரது வயது 67. இவர்களுக்கு ஒரு மகனும் 3 மகள்களும் உள்ளனர். இந்திரா அவர்களின் இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறுகிறது. இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
1 More update

Next Story