திடீரென ரிலீஸ் தேதியை மாற்றியது ‘ராஜவம்சம்’ படக்குழு


திடீரென ரிலீஸ் தேதியை மாற்றியது ‘ராஜவம்சம்’ படக்குழு
x
தினத்தந்தி 26 Sept 2021 3:50 PM (Updated: 26 Sept 2021 3:50 PM)
t-max-icont-min-icon

கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜவம்சம் படம் பண்டிகை தினத்தன்று ரிலீசாக உள்ளது.

நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராஜவம்சம். இப்படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் குடும்பங்கள் கொண்டாடும் படமாக தயாராகி உள்ளது. இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டீ.டி.ராஜா தயாரித்துள்ளார்.

இப்படம் வருகிற அக்டோபர் 1-ந் தேதி ரிலீஸ் ஆகும் என கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்த படக்குழு, தற்போது ரிலீஸ் தேதியை திடீரென மாற்றி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி ஆயுத பூஜை பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். அன்றைய தினம் விஷாலின் எனிமி, ஆர்யாவின் அரண்மனை 3 ஆகிய படங்களும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story