சினிமா துளிகள்

திருப்பதியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் + "||" + Nayanthara in Tirupati - Vignesh Sivan Sami Darshan

திருப்பதியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்

திருப்பதியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் ஆகியோர்  சாமி தரிசனம் செய்தனர்.  

தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத ஆசீர் வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கோவிலுக்கு வெளியே வந்த அவர்களுடன் கோவில் நிர்வாகிகளும் ரசிகர்களும் அவர்களுடன் புகைப் படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கும் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். நடிகை சமந்தா இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது. இதையடுத்து அட்லீ இயக்கத் தில் ஷாருக்கான் ஜோடியாக, இந்தி படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இதன் ஷூட்டிங், புனே அருகே சமீபத்தில் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் நயன்தாராவின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்
நடிகை நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி அவருடைய புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
2. பிறந்தநாளையொட்டி நயன்தாராவின் அடுத்த பேய் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது
ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடித்து வரும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
3. நயன்தாரா படத்தில் ‘லிப்ட்’ பட நாயகன்
நயன்தாராவும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சேர்ந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற சொந்த பட நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனம் படங்களை தயாரிப்பதுடன், வாங்கி திரையிட்டும் வருகிறார்கள்.
4. நயன்தாரா திருமண தேதி முடிவானது?
தென்னிந்தியாவில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துக்கொண்டு இருக்கும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களாக காதலிக்கிறார்கள்.
5. நயன்தாரா படத்தில் கவின்?
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான கவின், அடுத்ததாக நடிகை நயன்தாரா உடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.