சினிமா துளிகள்

லண்டனில் நடிகர் சித்தார்த்துக்கு அறுவை சிகிச்சை + "||" + Surgery for actor Siddharth in London

லண்டனில் நடிகர் சித்தார்த்துக்கு அறுவை சிகிச்சை

லண்டனில் நடிகர் சித்தார்த்துக்கு அறுவை சிகிச்சை
தமிழ், தெலுங்கில் உருவாகி உள்ள மகா சமுத்திரம் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் சித்தார்த், அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார்.
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் சித்தார்த். இவர் நடிப்பில் தற்போது மகா சமுத்திரம் படம் உருவாகி வருகிறது. இதில் தெலுங்கு நடிகர் சர்வானந்தும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மகா சமுத்திரம் படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி திரைக்கு வருகிறது.


இந்நிலையில், மகா சமுத்திரம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் சித்தார்த் கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து மகா சமுத்திரம் படத்தின் இயக்குனரான அஜய் பூபதி கூறுகையில், நடிகர் சித்தார்த் அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளதாகவும், அதன் காரணமாகத் தான் அவர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால் எதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது என்பது பற்றி அவர் தெரிவிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் புதிதாக 26,981 பேருக்கு கொரோனா; 1.70 லட்சம் பேருக்கு சிகிச்சை..!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 ஆயிரத்து 981 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
2. தாம்பரம் சித்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்
தாம்பரம் சித்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
3. தாம்பரம் சித்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்
தாம்பரம் சித்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
4. பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா - அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி
லதா மங்கேஷ்கருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளதாக அவரது மருமகள் ரச்சனா உறுதிபடுத்தி உள்ளார்.
5. நடிகை ரைசா வில்சனுக்கு கொரோனா பாதிப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்த நடிகை ரைசா வில்சன் 2வது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.