ரசிகர்களால் கோயில் கட்டி கொண்டாடப்பட்டவர்.... நடிகை குஷ்பு கடந்து வந்த பாதை


ரசிகர்களால் கோயில் கட்டி கொண்டாடப்பட்டவர்.... நடிகை குஷ்பு கடந்து வந்த பாதை
x
தினத்தந்தி 30 Sep 2021 1:16 PM GMT (Updated: 30 Sep 2021 1:16 PM GMT)

நடிகை குஷ்பு, இன்று தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

சினிமாவில் முன்னணி நடிகையாக வெற்றிகண்ட குஷ்பு, தற்போது அரசியலில் பரபரப்பாக இயங்கி வருகிறார். இன்று 51-வது பிறந்தநாளை கொண்டாடும் அவர், கடந்து வந்த பாதையை இந்த தொகுப்பில் காணலாம்.

1970-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி மும்பையில் பிறந்தார் குஷ்பு. இவரது இயற்பெயர் நகர்த் கான். 1980-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார் குஷ்பு. பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்திருந்த போதும், அவருக்கு புகழை தேடித் தந்தது,  தமிழில் பிரபு ஜோடியாக 1988-ம் ஆண்டு அவர் நடித்த ‘தர்மத்தின் தலைவன்’ படம் தான்.

இதையடுத்து வருஷம் 16, வெற்றி விழா, கிழக்கு வாசல், நடிகன், மைக்கேல் மதன காமராஜன், சின்ன தம்பி, நாட்டாமை, அண்ணாமலை, பெரியார், மன்னன், சிங்காரவேலன் என இவர் நடித்த வெற்றிப் படங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இவ்வாறு அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் குஷ்பு.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள குஷ்புவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்திய அளவில் நடிகை ஒருவருக்கு கோயில் கட்டப்பட்டது என்றால், அது குஷ்புவிற்கு மட்டும் தான். அந்த அளவிற்கு தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

Next Story