ஹீரோவானார் கோமாளி இயக்குனர்


ஹீரோவானார் கோமாளி இயக்குனர்
x
தினத்தந்தி 4 Oct 2021 11:21 PM IST (Updated: 4 Oct 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘கோமாளி’. இப்படத்தை இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். ‘கோமாளி’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக யாருடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்நிலையில், அவர் இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் மூலம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 More update

Next Story