சினிமா துளிகள்

12 வருடத்திற்குப் பிறகு விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர் + "||" + Famous actor who joins Vijay after 12 years

12 வருடத்திற்குப் பிறகு விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்

12 வருடத்திற்குப் பிறகு விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்
பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி 66 படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து விஜய் நடிக்க இருக்கும் 66வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ள விஜய்யின் 66வது படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார்.


இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்க இருப்பதாக அவரே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில் ரஜினியுடன் நடித்து வருகிறேன், சூர்யாவுடன் நடித்து வருகிறேன், விஜய்யுடன் நடிக்கவுள்ளேன்’ என்று கூறியிருக்கிறார். விஜய்யின் அடுத்த படத்தில் அவர் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரகாஷ் ராஜ் பேசுவதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

ஏற்கனவே பிரகாஷ் ராஜ், விஜய்யுடன் இணைந்து ‘கில்லி’, ’போக்கிரி’, ’ஆதி’, ’சிவகாசி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இறுதியாக கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ’வில்லு’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த பிரகாஷ்ராஜ் அதன்பின் 12 ஆண்டுகள் கழித்து தற்போது தான் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபல நடிகர்
நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வரும் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க ஆசைப்படுவதாக பிரபல நடிகர் கூறியிருக்கிறார்.
2. மீண்டும் ஒரு என்ட்ரி.... பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற பிரபல நடிகர்
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பிரபல நடிகர் ஒருவர் வைல்டு கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் சென்றிருக்கிறார்.
3. 7 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை
தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஹனிரோஸ் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
4. விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை கோலிசோடா பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்குகிறார்.
5. சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய இளம் நடிகர்
தெலுங்கு பட உலகில் முன்னணி இளம் கதாநாயகனாக இருப்பவர் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.