சினிமா துளிகள்

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் கவுதம் மேனனுக்கு இப்படி ஒரு வேடமா? + "||" + Is there such a role for Gautham Menon in Vetrimaran's 'Viduthalai'?

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் கவுதம் மேனனுக்கு இப்படி ஒரு வேடமா?

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் கவுதம் மேனனுக்கு இப்படி ஒரு வேடமா?
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை படத்தில், இயக்குனர் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது.


இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.


இந்நிலையில், தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குனர் என்றழைக்கப்படும் கவுதம் மேனன், வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சிவகார்த்திகேயனின் ‘சிங்கப்பாதை’ படத்தில் இணையும் ஷாருக்கான் பட பிரபலம்
சிவகார்த்திகேயனின் ‘சிங்கப்பாதை’ படத்தை இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அசோக் இயக்க உள்ளார்.
2. திடீரென்று சந்தித்தனர் சிவகார்த்திகேயன் படத்தில் கவுண்டமணி?
தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்த கவுண்டமணி சமீப காலமாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார்.
3. ‘எம்.ஜி.ஆர். மகன்’ படத்தில் தந்தை-மகனாக சத்யராஜ்-சசிகுமார்
‘எம்.ஜி.ஆர். மகன்’ படத்தில் சத்யராஜ்-சசிகுமார் இருவரும் தந்தை-மகனாக நடித்து இருக்கிறார்கள். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’, ‘சீமராஜா’ ஆகிய படங்களை டைரக்டு செய்த பொன்ராம் இயக்கியிருக்கிறார்.