மீண்டும் நெல்சன் உடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்?


மீண்டும் நெல்சன் உடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்?
x
தினத்தந்தி 12 Oct 2021 4:40 PM GMT (Updated: 2021-10-12T22:10:02+05:30)

விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன், அதன்பின் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் வினய், யோகி பாபு, கிங்ஸ்லி, அர்ச்சனா, தீபா, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் வெளியாகி உள்ள இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் - சிவகார்த்திகேயன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன், அதன்பின் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story