சினிமா துளிகள்

தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் பிரகாஷ் ராஜ் தோல்வி + "||" + Prakash Raj loses Telugu Actors Guild polls

தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் பிரகாஷ் ராஜ் தோல்வி

தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் பிரகாஷ் ராஜ் தோல்வி
தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் ஜூனியர் என்.டி.ஆர்., பிரபாஸ், சமந்தா, நாக சைதன்யா போன்ற முன்னணி நடிகர்கள் ஓட்டுப்பதிவில் கலந்து கொள்ளவில்லை.
தெலுங்கு சினிமாவின் நடிகர் சங்கத்தின் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். இவரை எதிர்த்து நடிகர் பிரகாஷ் ராஜ் களம் இறங்கினார். பிரகாஷ் ராஜூக்கு சிரஞ்சீவி, பவன் கல்யாண் உட்பட பெரிய நடிகர்களின் ஆதரவு இருந்தது. இதனால் பிரகாஷ்ராஜ் அணி பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டது.


மொத்தம் உள்ள 900 உறுப்பினர்களில் 833 பேருக்குத்தான் ஓட்டுப் போடும் உரிமை இருந்தது. இதில் 655 ஓட்டுக்கள் பதிவானது.  விஷ்ணு மஞ்சுக்கு 381 ஓட்டுக்களும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் 274 ஓட்டுக்களும் பெற்றார். இதன்மூலம் 113 ஓட்டு வித்தியாசத்தில் விஷ்ணு மஞ்சுவிடம் தோல்வியடைந்தார் பிரகாஷ்ராஜ். ஜூனியர் என்.டி.ஆர்., பிரபாஸ், சமந்தா, நாக சைதன்யா போன்ற முன்னணி நடிகர்கள் ஓட்டுப்பதிவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. பாராஒலிம்பிக் பேட்மிண்டன்: கலப்பு இரட்டையர் பிரிவில் பிரமோத் - பலாக் கோலி ஜோடி தோல்வி
பாராஒலிம்பிக் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பலாக் கோலி, பிரமோத் பகத் ஜோடி வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் தோல்வி அடைந்தனர்.
2. டோக்கியோ பாராஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை தோல்வி
டோக்கியோ பாராஒலிம்பிக் மகளிர் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் 7வது இடம் பிடித்து தோல்வியடைந்து உள்ளார்.
3. இளையோர் கைப்பந்து: இந்திய அணி தோல்வி
இளையோர் கைப்பந்து போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
4. ஊராட்சி மன்றத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
ஊராட்சி மன்றத் தேர்தலில் தபால் வாக்குகளில் முறைகேடு நடந்ததாக கூறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
5. டோக்கியோ ஒலிம்பிக்: மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா அரையிறுதியில் தோல்வி
டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா அரையிறுதியில் தோல்வி அடைந்து உள்ளார்.