விக்னேஷ் சிவன் - கவின் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு


விக்னேஷ் சிவன் - கவின் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Oct 2021 6:10 PM GMT (Updated: 15 Oct 2021 6:10 PM GMT)

லிப்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் ‘கூழாங்கல்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் கூழாங்கல் திரைப்படம் சர்வதேச பட விழாக்களில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.

இந்நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் பிரபலம் கவின் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ‘ஊர்க்குருவி’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இயக்குனர் விக்னேஷ் சிவனின் உதவியாளராக ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திலும், இயக்குனர் அஜய் ஞானமுத்துவிடம் ‘டிமாண்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள்’ படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அருண் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Next Story