சினிமா துளிகள்

தனுஷ் படத்தில் இணைந்த பிகில் பட நடிகை + "||" + Dhanush is the co-star of the film

தனுஷ் படத்தில் இணைந்த பிகில் பட நடிகை

தனுஷ் படத்தில் இணைந்த பிகில் பட நடிகை
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமானவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ‘நானே வருவேன்’ திரைப்படம் உருவாக உள்ளது.


தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. தற்போது இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

இதில் கதாநாயகியாக பிகில் படத்தில் நடித்த இந்துஜா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பிகில் சின்ன படம்... நஷ்டம் - கே.ராஜன்
கண்மணி பாப்பா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன், பிகில் சின்ன படம், நஷ்டம் அடைந்த படம் என்று கூறியிருக்கிறார்.
2. 7 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை
தமிழ், மலையாளம் மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஹனிரோஸ் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
3. வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ள பிரபல நடிகை - யார் தெரியுமா?
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பிரபல நடிகை வைல்டு கார்டு என்ட்ரியாக செல்ல உள்ளாராம்.
4. 3வது முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை
நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவர் ஜோடியாக நடிக்கும் நடிகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
5. கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்த நடிகை
உடல்நலக் குறைவாலும் சினிமா துறையில் தற்போதைய சூழல் காரணமாகவும் நடிகை ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.