சினிமா துளிகள்

அருண்ராஜா காமராஜ் - உதயநிதி கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு அறிவிப்பு + "||" + Arunraja Kamaraj - Title announcement of the film to be made in Udayanithi alliance

அருண்ராஜா காமராஜ் - உதயநிதி கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

அருண்ராஜா காமராஜ் - உதயநிதி கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு அறிவிப்பு
2019-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற ‘ஆர்ட்டிகில் 15’ படத்தின் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.
நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.


உதயநிதி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்திற்கு “நெஞ்சுக்கு நீதி” என படத்தின் தலைப்பு வைத்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகி இணையதளங்களிலும், வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றது.

இப்படத்தின் கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் நடிக்கின்றனர். மேலும் மயில் சாமி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசு, ‘ராட்சசன்’ சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசிக்கு பரிசு அறிவிப்பு; சமூக இடைவெளியை மறந்து குவிந்த மக்கள்
கிருஷ்ணகிரியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பினை அடுத்து சமூக இடைவெளியை மறந்து மக்கள் குவிந்தனர்.
2. இந்தியா - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் வரும் 26ந்தேதி தொடங்கும்; பி.சி.சி.ஐ. அறிவிப்பு
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடர் வரும் 26ந்தேதி தொடங்கும் என பி.சி.சி.ஐ. அறிவித்து உள்ளது.
3. விக்ரம் அடுத்த படத்தின் மாஸ் அறிவிப்பு
கோப்ரா, மகான், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து விக்ரம் நடிக்க இருக்கும் சீயான் 61வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
4. வரும் 6ந்தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 6ந்தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
5. தமிழகத்தில் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு: கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் 15-ந்தேதி வரை நீட்டிப்பு
தமிழகத்தில் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டு, கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகள் 15-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.