கே.ஜி.எப் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ராம்சரண்


கே.ஜி.எப் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ராம்சரண்
x
தினத்தந்தி 18 Oct 2021 10:49 PM IST (Updated: 18 Oct 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

பிரபாஸின் சலார் படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் தற்போது பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சலார் படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரணுடன் அவர் கூட்டணி அமைக்க உள்ளார்.

சமீபத்தில் சிரஞ்சீவி மற்றும் ராம்சரணை சந்தித்து கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் பிரசாந்த் நீல். அப்போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது ஷங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். இப்படத்தை முடித்த பின்னர் அவர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 More update

Next Story