வசூல் வேட்டை நடத்தும் ‘அரண்மனை 3’


வசூல் வேட்டை நடத்தும் ‘அரண்மனை 3’
x
தினத்தந்தி 18 Oct 2021 5:35 PM GMT (Updated: 18 Oct 2021 5:35 PM GMT)

ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியான ‘அரண்மனை 3’ திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அரண்மனை 3’. ஆர்யா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார். அக்டோபர் 14-ந் தேதி ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி ‘அரண்மனை 3’ திரைப்படம் தமிழகத்தில் முதல் 2 நாட்களில் 8.5 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ‘அரண்மனை 3’ படம் இந்த அளவு வசூலித்துள்ளது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

Next Story