பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் பிரியா பவானி சங்கர்?


பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் பிரியா பவானி சங்கர்?
x
தினத்தந்தி 19 Oct 2021 4:44 PM GMT (Updated: 19 Oct 2021 4:44 PM GMT)

தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது.

18 போட்டியாளர்களுடன் தொடங்கிய ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில், நமீதா மாரிமுத்து மற்றும் நதியா சங் வெளியேறியதால் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில், இந்த வாரத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் படத்தின் புரமோஷனுக்காக அங்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் வருகிற அக்டோபர் 22-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

அப்படத்தின் புரமோஷனுக்காகத் தான் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளாராம். அவருடன் நடிகர் ஹரீஷ் கல்யாணும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ஹரீஷ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story