சினிமா துளிகள்

முதன்முறையாக செல்வராகவன் உடன் கூட்டணி அமைத்த யோகிபாபு + "||" + Yogibabu was the first to form an alliance with Selvaragavan

முதன்முறையாக செல்வராகவன் உடன் கூட்டணி அமைத்த யோகிபாபு

முதன்முறையாக செல்வராகவன் உடன் கூட்டணி அமைத்த யோகிபாபு
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, அவ்வப்போது ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார்.
தனுஷ் - செல்வராகவன் கூட்டணிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர்கள் கூட்டணியில் வெளியான ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்த இவர்கள், தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்துக்கு ‘நானே வருவேன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், ‘நானே வருவேன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே தனுஷுடன் கர்ணன் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ள யோகிபாபு, செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் சுந்தர்.சி உடன் கூட்டணி அமைக்கும் ராஷி கண்ணா
தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷி கண்ணா, மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
2. மணிரத்னத்தின் பேவரைட் இயக்குனருடன் கூட்டணி அமைத்த மம்முட்டி
பிரபல மலையாள நடிகர் மம்முட்டி ஹீரோவாக நடிக்கும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது.
3. தேசிய விருது வென்ற இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் அருண் விஜய்
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் அருண் விஜய், அக்னிச்சிறகுகள், பார்டர், வா டீல், பாக்ஸர், சினம், யானை, ஓ மை டாக் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
4. கே.ஜி.எப் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ராம்சரண்
பிரபாஸின் சலார் படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
5. ‘கான்ட்ராக்டர் நேசமணி’ ஆக களமிறங்கும் யோகிபாபு
யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.