சினிமா துளிகள்

சர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது + "||" + Big Boss celebrity arrested for posting controversial video

சர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது

சர்ச்சைக்குரிய வீடியோ பதிவிட்டதால் பிக்பாஸ் பிரபலம் கைது
பிக்பாஸ் பிரபலம் ஒருவர், பட்டியலின சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் யுவிகா சவுத்ரி. இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தினமும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.


அந்த வகையில் கடந்த மே மாதம் பட்டியலின சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து, இவர் வெளியிட்ட வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பியது. நடிகை யுவிகா சவுதிரி மீது போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நடிகை யுவிகா சவுத்ரியை அரியானா போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டதை அடுத்து ஜாமீன் கோரி அவர், அரியானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகை யுவிகா சவுத்ரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நடிகை யுவிகா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. காணாமல் போன டென்னிஸ் வீராங்கனை... வீடியோ வெளியிட்ட சீன பத்திரிக்கை!
பெங்க் சுயாய் வீடியோவில் சிரித்தபடி நிற்கிறார்.பெங்க் கையசைத்து சிரிக்கிறார், பார்வையாளார்களிடம் இருந்து கைதட்டல்களையும் பெறுகிறார்.
2. அஜித்துடன் மோகன்லால்... வைரலாகும் வீடியோ
பிரபல மலையாள நடிகர் மோகன்லால், தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அஜித்துடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
3. சமோசா மாதிரி இருக்கிறார்... ஸ்ருதிஹாசனின் கிண்டல் வீடியோ
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவு செய்து இருக்கிறார்.
4. மைக் டைசனை அடிக்க தயாராகும் விஜய் தேவரகொண்டா - வைரலாகும் வீடியோ
அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகும் லிகர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது.
5. விஜய்யின் ஜாலி வாக்... வைரலாகும் வீடியோ
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பிற்காக டெல்லி சென்றிருக்கும் நடிகர் விஜய், அங்குள்ள ஷாப்பிங் மாலில் கூலாக நடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.