சினிமா துளிகள்

வழக்கறிஞராக களமிறங்கும் வரலட்சுமி சரத்குமார் + "||" + Varalakshmi Sarathkumar will be the lawyer

வழக்கறிஞராக களமிறங்கும் வரலட்சுமி சரத்குமார்

வழக்கறிஞராக களமிறங்கும் வரலட்சுமி சரத்குமார்
தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி, விக்னேஷ் சிவன் இயக்கிய ‘போடா போடி’ படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து ஹீரோயினாக மட்டுமல்லாது வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து வருகிறார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் வருகிறது. தற்போது வரலட்சுமி-யின் கைவசம் கன்னித்தீவு, காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ் ஆகிய படங்கள் உள்ளன.


இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், தற்போது மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். ‘அரசி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகை  வரலட்சுமி வழக்கறிஞராக நடிக்கிறார். தெலுங்கில் சத்யம், பிரம்மாஸ்திரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய சூரிய கிரண், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

ரசி மீடியா மேக்கர்ஸ் மற்றும் வி.வி பிலிம்ஸ் சார்பில் ஏ.ஆர்.கே.ராஜராஜா, ஆவடி சே.வரலட்சுமி ஆகியோர் தயாரிக்கிறார்கள். செல்வா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெய்பீம் படத்துக்கு ஆதரவு: சரத்குமார், சூரி, சீமான் உள்ளிட்டோருக்கு சூர்யா நன்றி
ஜெய்பீம் படத்தை பாராட்டி டுவிட்டரில் பதிவிட்டிருந்தவர்களுக்கு நடிகர் சூர்யா நன்றியை தெரிவித்துள்ளார்.
2. பெண்கள் வரலட்சுமி நோன்பு வழிபாடு
ஈரோட்டில் பெண்கள் வரலட்சுமி நோன்பு வழிபாடு நடத்தினார்கள்.
3. வெப் தொடரில் சரத்குமார்
வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் அதிகம் தயாராகின்றன.
4. பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சரத்குமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-