டேனியல் கிரெய்க் விலகல் - புதிய ஜேம்ஸ் பாண்ட் நடிகர் இவரா?


டேனியல் கிரெய்க் விலகல் - புதிய ஜேம்ஸ் பாண்ட் நடிகர் இவரா?
x

நோ டைம் டூ டை படத்தில் நடித்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரெய்க் விலகியதை தொடர்ந்து புதிய ஜேம்ஸ் பாண்ட் நடிகர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் பட உலகில் 1960-களில் தொடங்கிய ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன. ஷான் கானரி, ஜார்ஜ் லேஸன்பை, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் ப்ராஸ்னன் உள்ளிட்டோர் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

25-வது ஜேம்ஸ் பாண்ட் படமான நோ டைம் டூ டை படத்தில் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் இங்கிலாந்தை சேர்ந்த டேனியல் கிரெய்க் நடித்துள்ளார். இதுவரை நான்கு தடவை இந்த வேடத்தை ஏற்றுள்ள அவருக்கு இது ஐந்தாவது படம். இனிமேல் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க மாட்டேன் என்று டேனியல் கிரெய்க் அறிவித்து உள்ளார்.

எனவே அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் யார் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இத்ரிஸ் எல்பா, டாம் ஹார்டி, மைக்கேல் பாஸ்பெண்டர், ரிச்சர்ட் மேடன் டேனியல் கலுயா ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. இந்த நிலையில் தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் ஹென்றி கேவிலையும் ஜேம்ஸ் பாண்ட் வேடத்துக்கு பரிசீலிக்கின்றனர்.

இவர் சில படங்களில் சூப்பர் மேன் வேடத்தில் நடித்துள்ளார். ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்திற்கு ஹென்றி கேவில் பொருத்தமாக இருப்பார் என்று ரசிகர்களும் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

Next Story