சினிமா துளிகள்

இணையத்தில் வெளியான அண்ணாத்த... படக்குழுவினர் அதிர்ச்சி + "||" + Annatta released on the Internet ... The film crew was shocked

இணையத்தில் வெளியான அண்ணாத்த... படக்குழுவினர் அதிர்ச்சி

இணையத்தில் வெளியான அண்ணாத்த... படக்குழுவினர் அதிர்ச்சி
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் அண்ணாத்த திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை கொடுத்தார்கள்.


இந்நிலையில் அண்ணாத்த திரைப்படம் வெளியான சில மணி நேரத்திலேயே தமிழ்ராக்கர்ஸ், மூவிரூல்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட இணையதளங்களில் படம் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தை திருட்டு தனமாக இணையத்தில் வெளியிட உயர்நீதி மன்றம் தடை விதித்தது. தற்போது தடையை மீறி இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. யானை தந்தங்களை விற்க முயற்சி: கைதான 3 பேருக்கு கொரோனா வனத்துறையினர் அதிர்ச்சி
யானை தந்தங்களை விற்க முயற்சி: கைதான 3 பேருக்கு கொரோனா வனத்துறையினர் அதிர்ச்சி.
2. தமிழக மீனவர்களின் 105 படகுகளை ஏலம் விட இலங்கை முடிவு மீனவர்கள் அதிர்ச்சி
தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம் விடப்படுகிறது என்ற இலங்கை அரசின் அறிவிப்பால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
3. கோவில் குளியலறையில் 3 ரகசிய கேமராக்கள் பக்தர்கள் அதிர்ச்சி
கோவில் குளியலறைகளில் 3 ரகசிய கேமராக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை வைத்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. ரசிகர்களுக்கு நேரில் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் சிம்பு
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களை மகிழ்ச்சியில் குளிக்க வைக்க சிம்பு அதிரடி நடவடிக்கை எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
5. மனம் உடைந்து இறந்து விடுவேன் என்று நினைத்தேன் - சமந்தா
விவாகரத்தினால் மனம் உடைந்து இறந்து விடுவேனோ என்று பயந்தேன் என்று நடிகை சமந்தா அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.