விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்


விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்
x
தினத்தந்தி 8 Nov 2021 6:09 PM GMT (Updated: 8 Nov 2021 6:09 PM GMT)

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை கோலிசோடா பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்குகிறார்.

திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் கைவசம் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கொலை போன்ற படங்கள் உள்ளன.

இதுதவிர, கோலிசோடா பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்கிற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதில் அவர் விஜய் ஆண்டனிக்கு நண்பராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் விஜய் ஆண்டனியும், சரத்குமாரும் முதன்முறையாக இணைந்துள்ளனர்.

ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பை டையு, டாமனில் வருகிற டிசம்பர் மாதம் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

Next Story