அருண் விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் சந்தானம்


அருண் விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் சந்தானம்
x
தினத்தந்தி 9 Nov 2021 6:16 PM GMT (Updated: 9 Nov 2021 6:16 PM GMT)

தமிழ் திரையுலகில் பிசியான நடிகர்களாக வலம்வரும் அருண் விஜய்யும், சந்தானமும் பட வெளியீட்டில் போட்டி போட உள்ளனர்.

‘குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர் அறிவழகனும் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ள படம் ‘பார்டர்’. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்துக்கு போட்டியாக சந்தானம் நடித்துள்ள ‘சபாபதி’ திரைப்படம் களமிறங்க உள்ளது. ‘சபாபதி’ படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சந்தானத்துடன் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படமும் வருகிற நவம்பர் 19-ந் தேதி அருண்விஜய்யின் பார்டர் படத்துக்கு போட்டியாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Next Story