ரஜினிகாந்த் நடித்த ‘முரட்டுக்காளையை மறக்க முடியாது’ - ஜூடோ ரத்னம்


ரஜினிகாந்த் நடித்த ‘முரட்டுக்காளையை மறக்க முடியாது’ - ஜூடோ ரத்னம்
x
தினத்தந்தி 14 Nov 2021 8:33 AM GMT (Updated: 14 Nov 2021 8:33 AM GMT)

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஸ்டண்ட் மாஸ்டர்களில் முக்கியமானவர் ஜூடோ ரத்னம். இவர் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை காட்சிகள் அமைத்து கொடுத்து இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழி படங்களில் ஜூடோ ரத்னம் ஸ்டண்ட் மாஸ்டராக வேலை செய்து இருக்கிறார்.

அவரிடம் ஒரு ‘மினி’ பேட்டி:-

கேள்வி:- எந்த கதாநாயகனுக்கு அதிக படங்கள் சண்டை காட்சிகள் அமைத்து கொடுத்தீர்கள்?

பதில்:- ரஜினிகாந்துக்கு 46 படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக வேலை செய்து இருக்கிறேன். அவர் நடித்த ‘முரட்டுக்காளை’ படத்தை மறக்க முடியாது. அந்த படத்தின் சண்டை காட்சிகளில் மட்டும் அவர் 20 நாட்கள் நடித்தார்.

கேள்வி:- சண்டை காட்சிகளில் மிகுந்த துணிச்சலுடன் நடித்த கதாநாயகர்கள் யார்-யார்?

பதில்:- கமல்ஹாசன், விஜயகாந்த், அர்ஜுன் ஆகிய மூன்று பேரும் பயப்படாமல் துணிச்சலுடன் நடிப்பார்கள்.

கேள்வி:- எந்த படத்திலாவது நடித்து இருக்கிறீர்களா?

பதில்:- ‘தாமரைக்குளம்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறேன்.

கேள்வி:- உங்களை பெயர் சொல்லி அழைத்த கதாநாயகன் யார்?

பதில்:- ஜெய்சங்கர்.

கேள்வி:- சினிமா உலகில் நீங்கள் சந்தித்த நல்ல பண்பாளர் யார்?

பதில்:- ரஜினிகாந்த்.

Next Story