‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு


‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Nov 2021 5:07 PM GMT (Updated: 15 Nov 2021 5:07 PM GMT)

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நாளை வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். காமெடி கலந்த ரொமாண்டிக் திரைப்படமாக இது உருவாகி உள்ளது.

Next Story