நிர்வாணமாகவோ கவர்ச்சியை காட்டவோ மட்டுமே நான் சினிமாவிற்கு வரவில்லை - ராதிகா ஆப்தே


நிர்வாணமாகவோ கவர்ச்சியை காட்டவோ மட்டுமே நான் சினிமாவிற்கு வரவில்லை - ராதிகா ஆப்தே
x
தினத்தந்தி 19 Nov 2021 11:42 PM IST (Updated: 19 Nov 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கவர்ச்சியாக நடிப்பது குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார்.

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பிரபலமான ராதிகா ஆப்தே தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். ஒரு படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில், ''சமீபத்தில் ஒரு இயக்குனர் என்னை சந்தித்து அவரது படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னார். ஏன் இதே போன்ற கதைகளுடன் வருகிறீர்கள் என கேட்டேன்.

நீங்கள் பட்லாபூர், அகல்யா போன்ற படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்தது மட்டுமின்றி ஏற்கனவே நிர்வாணமாக ஒரு படத்தில் நடித்து இருக்கிறீர்கள் அல்லவா என கேட்டார். எனவே இப்படத்தில் அதே போன்ற கதாபாத்திரம் செய்வீர்களோ என்ற எண்ணத்தில் உங்களை அணுகினேன் என தெரிவித்தார். அதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

இந்திய சினிமாவில் மட்டுமல்ல வெளிநாட்டு படங்களிலும் நிர்வாணமாக நடிப்பது ஒன்றும் தவறல்ல. கதைக்கு தேவை என்றால் அப்படி நடிக்கலாம். நிர்வாணமாக நடிக்க வைப்பதற்காகவே கண்டபடி கதைகளை கொண்டு வந்தால் எப்படி?. நிர்வாணமாகவோ கவர்ச்சியை காட்டவோ மட்டுமே நான் சினிமாவிற்கு வரவில்லை. கதை பிடித்திருந்தால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வேன். கதையே இல்லாமல் உடம்பை காட்டவோ நிர்வாணமாக நடிக்கவோ மாட்டேன்'' என்றார்.
1 More update

Next Story