சினிமா துளிகள்

இந்திய சர்வதேச திரைப்பட விழா- ஹேம மாலினிக்கு சிறந்த ஆளுமை விருது + "||" + Indian International Film Festival - Best Personality Award for Hema Malini

இந்திய சர்வதேச திரைப்பட விழா- ஹேம மாலினிக்கு சிறந்த ஆளுமை விருது

இந்திய சர்வதேச திரைப்பட விழா- ஹேம மாலினிக்கு சிறந்த ஆளுமை விருது
கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ஹேம மாலினிக்கு இந்த ஆண்டின் சிறந்த இந்திய ஆளுமை விருது வழங்கப்பட்டது.
பனாஜி:

கோவாவில் 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. திரைப்பட விழாவில் சர்வதேச பிரிவில் சுமார் 73 நாடுகளில் இருந்து 148 படங்கள் இடம்பெறுகின்றன. 28ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. ஓடிடி தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ 5, வூட், சோனி லைவ் ஓடிடி தளங்கள் விழாவில் கலந்து கொள்கின்றன.


துவக்க விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர், மத்திய இணை மந்திரி எல்.முருகன், பாலிவுட் நட்சத்திரங்கள் சல்மான் கான் மற்றும் ரன்வீர் சிங், மத்திய  ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சுமார் 75 திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சர்வதேச திரைப்பட விழாவையொட்டி இந்திய திரைப்பட ஆளுமை விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான இந்திய திரைப்பட ஆளுமை விருது ஹேம மாலினிக்கு வழங்கப்பட்டது. விருதை மத்திய மந்திரி அனுராக் தாகூர், இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் வழங்கினர். இதேபோல், சிறந்த பாடலாசிரியரும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய தலைவருமான பிரசூன் ஜோஷிக்கும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.

ஹாலிவுட் பிரபலம் மார்ட்டின் ஸ்கோர்செஸி மற்றும் புகழ்பெற்ற ஹங்கேரிய திரைப்பட தயாரிப்பாளர் இஸ்டெவன் சாபோ ஆகியோருக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. அஸ்வினுக்கு ஐ.சி.சி. விருது..?
இந்த ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருது பட்டியலில் அஸ்வின் இடம் பெற்றுள்ளார்.
2. கொரோனா காலகட்டத்தில் தபால் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது
கொரோனா காலகட்டத்திலும் சிறப்பாக பணியாற்றிய தபால் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 89 பேருக்கு சென்னையில் நேற்று விருதுகள் வழங்கப்பட்டன.
3. நடிகர் ரஜினிகாந்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது 25-ந் தேதி வழங்கப்படுகிறது
நடிகர் ரஜினிகாந்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வருகிற 25-ந் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.
4. சர்வதேச பட விழாவில் கர்ணன், கட்டில் படங்களுக்கு விருது
பெங்களூருவில் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டன.
5. தேசிய விருது வென்ற இயக்குனரின் பாராட்டை பெற்ற சுபிக்‌ஷா
கோலி சோடா 2, கடுகு, வேட்டை நாய் படங்களில் நடித்த சுபிக்‌ஷாவை பிரபல இயக்குனர் சமூக வலைத் தளத்தில் பாராட்டி இருக்கிறார்.