பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகல்?


பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகல்?
x
தினத்தந்தி 22 Nov 2021 6:13 PM GMT (Updated: 22 Nov 2021 6:13 PM GMT)

நடிகர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. 4 சீசனை தொடர்ந்து 5வது சீசனையும் கமல் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால், வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் கலந்துக் கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சில வாரங்கள் கமல் விலகுவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Next Story